
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இன்று(22) தப்பி ஓடியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்ட குறித்த நபரே இவ்வாறு சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
தப்பியோடிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் வவுனியா பொலிசார் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.