
இலங்கையில் உள்ள 35 இலட்சம் இளம் தலைமுறையினரில் 71 வீதமானோரே பாடசாலைக்கு செல்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் (Global School-Based Student Health Survey – 2024) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”நாட்டில் 35 இலட்சம் இளம் தலைமுறையினர் உள்ளனர். இவர்களில் 29 சதவீதமான 1,000,015 பேர் கல்வியை இடைநிறுத்தியுள்ளதுடன் 71 வீதமானோரே பாடசாலைக்கு செல்கின்றனர்.
கடந்த வருடம் 40 அரச பாடசாலைகளில் தரம் 08 முதல் 12 வரையிலான 3,843 மாணவர்களை இணைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் 17.7 வீதமானோர் ஆரோக்கியமற்ற பானங்களை அருந்துவதுடன் இவர்களில் பெரும்பாலானோர் ஆண் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டது.