
இங்கிலாந்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து விளம்பரங்களை நீக்கிவிட்டு பயனர்கள் பயன்படுத்துவதற்கு கட்டணங்களை விதிப்பது குறித்து மெட்டா நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
இந்தத் திட்டங்களின் கீழ், சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தும் நபர்கள் விளம்பரத்தை விரும்பவில்லை என்றால், விளம்பரமில்லா அனுபவத்திற்கு பணம் செலுத்துமாறு மெட்டா நிறுவனம் கோரவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மெட்டா நிறுவனம் ஏற்கனவே விளம்பரமில்லா சேவையை வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் இதேபோன்ற சேவையை வழங்குவதற்கு மெட்டா நிறுவனம் நிறுவனம் ஆராய்ந்து வருகின்றது.