
பல காய்கறிகளின் விலைகள் சடுதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தம்புள்ளை (Dambulla) சிறப்பு பொருளாதார வர்த்தக மையத்தின் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், மிளகாய், பச்சை மிளகாய், பீன்ஸ் மற்றும் தக்காளி ஆகியவற்றின் விலைகள் சடுதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மொத்த விலைகளுடன் ஒப்பிடும்போது சில்லறை சந்தை விலைகள் சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ரூபாய் 900 இற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மீன் மற்றும் மிளகாய் மொத்த விற்பனை விலை நேற்று (05) முதல் ரூபா 450 ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.