
என்னை நீங்கள் எமது மயானத்தில் அடக்கம்செய்வீர்களா?
வரலாற்றுக் காலம் தொட்டு எமது சிறுப்பிட்டி இந்துசிட்டி மயானம் எம்மவர்கள் இழப்பின் பின் அடக்கம் செய்து வரப்பட்டது
பின் இந்த இடத்தை ஒட்டிய இடங்கள் கள்ளகாணி விற்பனையாளர்களாலும், அவர்களிடம் கள்ளகாணி வாங்கியவர்களினாலும் அபகரிக்கப்பட்டுள்ளது அதனால் இந்துசிட்டி மயானத்தில் அருகு வரை வந்து வாழ்ந்து கொண்டுஅந்தமயானத்தை அடாவடித்தனத்தால் கடந்த ஒரு சதார்த்தமாக மயானத்தில் எம்மவர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெறாமல் தடுத்து அடாவடிசெய்து வரும் ஒரு கூட்டம் எமக்கு அச்சுறுத்தலாகள் இயங்கிவருகின்றது.
கடந்த ஒரு சதார்த்தமாக மயானத்தில் அங்கே நாங்கள் எம்மவர்களை அடக்கம்செய்ய முடியவில்லை நாங்கள் நீதி மன்றம் நாடி
நீதிமன்றங்களில் வழக்குகளில் நடைபெற்று தீர்வுகள் எமக்கு சார்பாக வந்தபின்னும் இவர்களின் அடாவடித்தனம் குறையவில்லை,
எம்மவர்கள் இழப்புகளின் துயர் ஒருபுறம், அவர்களை அனாதைபிணங்களாய் எங்கே அடக்கம்செய்வது என்ற கவலை ஒருபுறம், அடுத்தவர் மயானத்தில் கெஞ்சி நிற்கும் நிலை ஒருபுறமாவிட்டது.
இதில் சமூக சோதி அல்லிக்குட்டி சின்னத்துரை நானும் பலமுறை நீதி மன்றம் சென்று இதற்கான நீதிக்காக போராடியுள்ளேன்
என்னையும் இன்னோர் மயானம் எடுத்து செல்வார்களா?
அல்லது எமது பரம்பரை மயானத்தில் அடக்கம் செய்வார்களா?
என்று பலரிடம் கேட்டுள்ளேன் அப்படி கேட்டவர்களில ஒருவர்தான்
இதை உங்கள் முன் எனக்காக முன்வைக்கின்றார்
என்னையேனும் என்மயாகத்தில் எரியூட்டுங்கள்
இல்லை என்றால் இந்தநாட்டில்
இந்த அரசுகளில்
இந்த கிராம சேவகர்களிடம்
இந்த ஆளுனர்களிடம்
நீதி மன்றங்களிடம்
நீதி என்ற சொல்லே இல்லை எப்பது உண்மையாகும்
அதனால் என்னை என்றாலும் எடுத்து சென்று எமது மயானத்தில் கொள்ளியிடுங்கள்