கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை (22) இரவு அவர் கொழும்பிலிருந்து அட்டன் ஊடாக நுவரெலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, கித்துல்கல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் வீதியை விட்டு விலகி, மின் கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தின் போது பிரதி அமைச்சருக்கோ அல்லது வாகனத்தைச் செலுத்திய சாரதிக்கோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், விபத்தினால் வாகனத்திற்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக கித்துல்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
![]()