திருமதி நிஷாந்தன் சிந்துபிரியா (சிந்து)
தோற்றம்: 08.12.1989
மறைவு: 30.08.2026
திருமதி நிஷாந்தன் சிந்துபிரியா (சிந்து)
(அபிவிருத்தி உத்தியோகத்தர் – உடுவில் பிரதேச செயலகம்)
இல.83, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நிஷாந்தன் சிந்துபிரியா அவர்கள் கடந்த 30.08.2026 அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார் வைத்தியநாதன் நிஷாந்தன் (நிர்வாகி – பாரதி கல்வி நிலையம்) அவர்களின் பாசமிகு மனைவியும், தொசாணி (தரம் – 03, யாழ்/இந்து ஆரம்ப பாடசாலை), ஜிவந்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும், செந்தில்நாதன் (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர், யாழ் மாநகர சபை) மகேஸ்வரி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும், மயூரி (வ/ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம்) அவர்களின் அன்புச் சகோதரியும், வைத்தியநாதன் (ஓய்வுநிலை கிராம சேவையாளர்), பாலராணி தம்பதியரின் பாசமிகு மருமகளும், நிரோசினி, நிரஞ்சன், தர்சன் ஆகியோரின் மைத்துனியும், அமரர் செந்தில்ராஜா, செந்தில்வேல் ஆகியோரின் பெறாமகளும், தனபாலசரஸ்வதி (ஆயுள்வேத வைத்தியர் – யாழ் மாநகர சபை), அமரர் யோகேஸ்வரி ஆகியோரின் மருமகளும், காலஞ்சென்றவர்களான கனகராசா, தங்கராசா, தர்மராசா, சண்முகராசா ஆகியோரின் மருமகளும், செல்வாராணியின் பெறாமகளும், சங்கீத் (அபிவிருத்தி உத்தியோகத்தர், கரவெட்டி பிரதேச செயலகம்) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (02.09.2026) புதன்கிழமை காலை 8.00 மணிக்கு அன்னாரின் சிறுப்பிட்டி இல்லத்தில் நடைபெற்று, அஞ்சலி நிகழ்வுக்காக உடுவில் பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டு, பின்னர் தகனக்கிரியைக்காக பூதவுடல் கோம்பயண்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலி.
தொடர்புகளுக்கு:
- 076 5518 686
- 077 9506 997
![]()
