கண்முன்னே தாய், தந்தை உட்பட மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த நொடியில், கொஞ்சம் பயந்திருந்தாலும் ஒரு பெரிய பேரழிவு நடந்திருக்கும்.
ஆனால், அந்தச் சூழ்நிலையிலும் துளியும் பதற்றப்படாமல், அசாத்தியமான மன தைரியத்தோடு செயல்பட்டு மெயின் சுவிட்சை (Main Switch) உடனடியாக அணைத்து மூன்று பேரின் உயிரையும் காப்பாற்றியிருக்கிறான் நந்துட்டன்.
முதுக்குறிச்சியைச் சேர்ந்த இந்தச் சிறுவனின் விவேகமும் துணிச்சலும் இன்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.
ஆபத்து நேரத்தில் சாதுரியமாகச் செயல்பட்டுத் தன் குடும்பத்தைக் காத்த இந்த உண்மையான கதாநாயகனுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
இப்படிப்பட்ட பிள்ளைகள் சமூகத்திற்கு ஒரு பெரிய நம்பிக்கை
![]()
