மாவத்தகமவின் பரகஹதெனியப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத கிணற்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், மாவத்தகமவின் வேவுடப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனக் கூறப்படுகிறது.
நீதிமன்ற விசாரணைக்காக, சம்பவ இடத்திலேயே சடலம் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()
