சந்தையில் நிலவும் அதிக கேள்வி மற்றும் நுகர்வோரின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, நாளைய தினம் (27) ஏழு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விநியோகத்தை அதிகரிக்கும் நோக்கில், எரிவாயுவை ஏற்றிவந்த கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி நாட்டை அண்மித்த கப்பலிலும், ஒக்டோபர் 24ஆம் திகதி நாட்டை வந்தடைந்த மற்றுமொரு கப்பலிலும் மொத்தமாக 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டை வந்தடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சந்தைக்கான எரிவாயு விநியோகத்தைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வீட்டுப் பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்களைத் தட்டுப்பாடின்றி நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
![]()
