வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் கடற்றொழில் படகுகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேற்கு நோக்கி சற்று சாய்ந்த நிலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், இன்று அதிகாலை 5.30 மணியளவில் அதே கடற்பரப்பில் நிலைகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் குறித்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
