தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மருத்துவ பராமரிப்புடன் கண்ணியமாகவும் நிம்மதியாகவும் தங்கியிருக்கக்கூடிய நவீன நோயாளர் விடுதி திறந்து வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் Bridge to Humanity அமைப்பின் சுமார் 03 கோடி ரூபாய் நிதி உதவியுடன் முதற்கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட இந்த விடுதியை, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், பாராளுமன்ற உறுப்பினர் தோழர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, Bridge to Humanity அமைப்பின் பணிப்பாளர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் இணைந்து திறந்து வைத்தோம்.
இந்த விடுதி, மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ள நோயாளர்கள் மருத்துவ கண்காணிப்புடனும் தேவையான பராமரிப்புடனும் தங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் தகுதியான நோயாளர்கள் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.
இந்த மனிதநேய முயற்சியை சாத்தியமாக்கிய Bridge to Humanity அமைப்பிற்கும், இதற்காக அர்ப்பணிப்புடன் பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கண்ணியத்தையும் மனிதநேயத்தையும் உறுதிப்படுத்தும் பணிகளில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்
![]()
