இந்தியாவின் முதலாவது தனியார் தயாரிப்பான ‘விக்ரம்-1’ (Vikram-1) சுற்றுப்பாதை ஏவுகலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
22 மீட்டர் உயரமும், நான்கு நிலைகளையும் (four-stage) கொண்ட இந்த ராக்கெட் வானத்தை நோக்கிச் சீறிப் பாய்ந்தபோது, அது மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது.
‘ஆகாமன்’ (Aagaman) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளிப் பயணமானது, இந்திய மண்ணில் இருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு ராக்கெட்டை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த ஓர் இந்தியத் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் முதல் முயற்சியாகும்.
இந்த விண்கலம் பூமியிலிருந்து 450 கிலோமீட்டர் உயரத்திலுள்ள சுற்றுப்பாதையை 60 டிகிரி சாய்வில் அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த ‘ஆகாமன்’ பயணம் முதன்மையாக ஒரு தொழில்நுட்ப விளக்கப் (Technology Demonstration) பயணமாகும். ஸ்கைரூட் நிறுவனத்தின் கூற்றுப்படி, வெற்றிகரமான ஏவுதலை மேற்கொள்வது, ஏவுதள கோபுரத்தைத் பாதுகாப்பாகத் தாண்டிச் செல்வது மற்றும் ராக்கெட் மேலேறும்போது தேவையான விமானத் தரவுகளைச் சேகரிப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
![]()
