பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட சுகாதார நிலையங்களை மீள புனரமைப்பதற்காக ரூ.3 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஹிஜ்ரா நகர், செங்காமம் மற்றும் ஹிதாயாபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சுகாதார நிலையங்களின் புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் உவைஸ் பாறூக் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் இந்த நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளார்.
புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், குறித்த சுகாதார நிலையங்கள் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படவுள்ளன.
இந்த நடவடிக்கைக்கு பொத்துவில் பிரதேச மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
![]()
