ஓட்டமாவடியைச் சேர்ந்த மூன்று வயதுப் பிஞ்சு மகள் ருகைய்யா, கல்லீரல் புற்றுநோயின் தாக்கத்தால் மஹரகம ஏபோட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார் என்ற சோகச் செய்தி ஒட்டுமொத்த நெஞ்சங்களையும் உலுக்கியுள்ளது.
வாழ்நாளின் தொடக்கத்திலேயே கொடிய நோயுடன் கடுமையாகப் போராடிய அந்த மழலையின் இழப்பு, அவளது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் மீளாத் துயரத்தைத் தந்துள்ளது.
குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ருகைய்யாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன். ஓம் சாந்தி!
![]()
