சேவைநலன் பாராட்டு நிகழ்வு
கிளிநொச்சி கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர் கந்தையா குககுமாரராசா அவர்களின் சேவைநலன் பாராட்டு நிகழ்வு, கௌரவ தலைவர் சு. ஜதீஸ்வரன் அவர்களின் தலைமையில், சங்கத்தின் புதிய மண்டபத்தில் 25.08.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக, கந்தையா குககுமாரராசா அவர்கள் சங்கத்தின் புதிய மண்டபத்தை நாடா வெட்டி திறந்துவைத்தார்.
தொடர்ந்து, நெறியாளர்குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள், சேவைநாயகன் கந்தையா குககுமாரராசா அவர்களின் நான்கு தசாப்த கால சிறப்பான பணியைப் பாராட்டி, வாழ்த்துகளையும் கௌரவத்தையும் தெரிவித்தனர்.
இதன்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கடந்த நான்கு தசாப்தங்களாக சங்கத்தின் நலனுக்காகவும் கௌரவத்திற்காகவும் சுயநலம் பாராது அர்ப்பணிப்புடன் உழைத்த உத்தமமான பணியாளராக கந்தையா குககுமாரராசா அவர்கள் திகழ்ந்துள்ளார்.
அத்தகைய சிறப்புமிக்க பணியாளரை கௌரவிப்பதில் கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் பெருமை கொள்கிறது.
![]()
