வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 21 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடைக்கிடையே பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மின்னல் ஏற்படும் நேரங்களில் திறந்தவெளிகளில் இருப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
![]()
