வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக ஆரம்பமாகியுள்ள.
இந்த நிலையில், இன்று காலை வசந்தமண்டப பூஜைகளின் பின்னர் தேர் ஏறி ஊர்வலம் வரும் நல்லூர் கந்தன் புறப்பட்டு மக்களுக்கு காட்சியளித்துள்ளார்.
கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் திருவிழா நாளையதினம்(10) கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வருகின்றது.
நாடளாவிய ரீதியில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்துள்ள நிலையில், புலம்பெயர் மக்களும் நல்லூரானை தரிசிக்க படையெடுத்துள்ளனர்
![]()
