மாரவில பகுதியில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது, அதிக விலைக்கு அரிசி விற்ற பல வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கட்டுப்பாட்டு விலையை மீறி நுகர்வோரைச் சுரண்டிய வர்த்தகர்களுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் அரிசி ஆலைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் இவ்வாறான சுற்றிவளைப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் போது அதன் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) சரிபார்க்குமாறும், மேலதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து 1977 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
![]()
