உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதனைத் தொடர்ந்து, இலங்கையிலும் இன்று (மே 15, 2026) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம்: நேற்றைய விலையான 395,000 ரூபாவிலிருந்து 1,000 ரூபா குறைவடைந்து இன்று 394,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம்: நேற்றைய விலையான 363,400 ரூபாவிலிருந்து 1,000 ரூபா குறைவடைந்து இன்று 362,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை மாற்றமே உள்நாட்டிலும் தங்கம் விலை குறைய பிரதான காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()
