மட்டக்களப்பு, பாலையடிவட்டைப் பகுதியில் நிலத்தில் கிடந்த, பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தைச் சாப்பிட்ட 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயது ரொ.சஞ்சீவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் பாலையடிவட்டை வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார்.
இருப்பினும், விஷம் உடற்பாகங்களில் பரவியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
![]()
