தாய்லாந்தில் இருந்து மர்மப் பார்சல்களுடன் வந்திறங்கிய இரு இலங்கை பயணிகள், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கச்சிதமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்! பாங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸ் (TG-307) விமானம் மூலம் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இவர்கள் கட்டுநாயக்கவை வந்தடைந்தனர்.
இவர்கள் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களது 2 பயணப் பொதிகளை (Suitcases) அதிரடி சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, துணிகளுக்குள் மிகச் சாதுரியமாக 13 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோ கிராம் 104 கிராம் எடையுடைய உயர்தர ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது!
இதன் சந்தைப் பெறுமதி சுமார் 04 கோடி 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்.. முதலாவது நபர் – படோவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒரு பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்!
இரண்டாவது நபர் – நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த, ஊதுபத்தி வியாபாரத்தில் ஈடுபடும் 26 வயதுடைய இளைஞர்!
உறவினர்கள் – இதில் வேடிக்கை என்னவென்றால், படோவிட்ட நபரின் சொந்த சகோதரியைத்தான் இந்த ஊதுபத்தி வியாபாரி திருமணம் செய்துள்ளார். அதாவது, அளவோடு ‘வியாபாரம்’ செய்ய வேண்டிய மைத்துனர்கள் இருவரும் சேர்ந்து, இப்போது ‘வழக்கில்’ நீதிமன்ற அதிரடி உத்தரவு!
கைது செய்யப்பட்ட இரு மைத்துனர்களும் உடனடியாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து, பின்னணியில் இருக்கும் பெரும் புள்ளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிலுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் தலைமையகத்திடம் (PNB) இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
![]()
