எதிர்வரும் மாதத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை (A/L) மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடைபெறவுள்ள நிலையில், இந்த நேரகாலமற்ற மின்தடை மாணவர்களின் இரவுநேரப் படிப்பைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
நகரப் பகுதி மாணவர்களுடன் ஒப்பிடுகையில், தீவக மாணவர்கள் ஏற்கனவே பல சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், இந்த மின்சாரப் பற்றாக்குறை அவர்களின் பரீட்சை முடிவுகளைப் பாதிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்படும் என தற்போதைய அரசு வழங்கிய வாக்குறுதிகள், நடைமுறையில் நெடுந்தீவு போன்ற பகுதிகளில் இன்னும் சாத்தியமாகவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதிய மாற்று இயந்திரம் ஒன்று கொண்டுவரப்படும் வரை இந்த அவதி தொடரும் என்பதால், அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு தற்காலிகமாகவாவது ஒரு நகரும் மின் உற்பத்தி இயந்திரத்தை (Mobile Generator) வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
![]()
