காத்தான்குடி பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவர், இந்த நகரசபை உறுப்பினர் தனக்குத் தொல்லை கொடுத்ததாகவும், முறையற்ற வகையில் நடந்துகொள்ள முயன்றதாகவும் காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நகரசபை உறுப்பினரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் தேசிய பட்டியல் மூலம் காத்தான்குடி நகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் காவல்துறையினரின் முதற்கட்ட அறிக்கையை ஆராய்ந்த நீதவான், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
![]()
