சுவிற்சர்லாந்தை தளமாக கொண்ட தியாகி அறக்கொடை நிறுவனத்தின் உரிமையாளரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் சமூக சேவகருமான தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் உலகலாவிய ரீதியில் பல உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், இந்தியாவின் தமிழ்நாட்டில் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் இசை நிகழ்ச்சியில் பார்வை இன்றி பங்கேற்கும் இரண்டு சிறுவர்களுக்கு தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் உதவி செய்துள்ளார்.
குறித்த இரண்டு சிறுவர்களுக்கும் இந்திய மதிப்பில் தலா 50,000 ருபாய் உதவியாக வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் வேறொரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் உதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()
