மன்னார் மூன்றாம்பிட்டியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடைக்குள் வெட்டுக்கிளி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடை சாப்பிட முற்பட்டபோதே இதனை அவதானித்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மன்னாரில் முட்டை ரொட்டிக்குள் இரும்புக் கம்பித் துண்டு காணப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்த நிலையில், தற்போது மற்றொரு உணவுப் பொருளில் வெட்டுக்கிளி காணப்பட்டுள்ளமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், உணவகங்களின் சுகாதாரத் தரத்தை உரிய முறையில் கண்காணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![]()
