கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பகல் வேளையில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும், போதியளவு நீர் அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்துதல், திறந்தவெளிகளில் கடுமையான உடலுழைப்பில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
![]()
