23வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடந்து வருகிறது.
48 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்தவகையில் இன்றைய அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
அந்தவகையில், ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் ஒயார்சபால் கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
அதனை தொடர்ந்து போட்டியின் இரண்டாம் பாதியில், 58வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் பெட்ரொ பேரோ இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
இதனால் ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் தொடரின் அணிகள் மோத உள்ளன.
![]()
