மேஷம்
ஆசிரியர்களின் பாராட்டினை பெறுவர். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். நீண்ட தூர யாத்திரை செய்வீர்கள். தொழிலில் நல்ல அனுபவம் கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக செல்லும். குடும்பத் தலைவிகளின் எண்ணங்கள் ஈடேறும். உத்யோத்தில் உள்ளவர்கள் தங்கள் சக ஊழியர்களின் உதவியால் வேலைகளை முடித்துவிடுவீர்கள்.
ரிஷபம்
நண்பர்கள் தங்கள் உறவினை நிலைநிறுத்த விட்டுக் கொடுத்து செல்லவும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு.,உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. ஆவணங்களை பாதுகாப்பீர்கள். மாணவர்கள் தீய நட்பை விலக்குவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். கை, கால் வலி வந்துப் போகும்.
மிதுனம்
பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மீகச் சிந்தனை மேலோங்கும். பெண்களுக்கு விரும்பியவாறே துணை அமையும். தொலைந்து போன முக்கியமான பழைய பொருள் கைக்கு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். வியாபாரத்தை பெருக்க புதிய சிந்தனை தோன்றும்.
கடகம்
கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு தங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்க திட்டமிடுவர்.ஆன்மீக சிந்தனை மேலோங்கும். கோவில் விழா என்று கலந்து கொள்வீர்கள். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். உடல் நலத்தில் சுறுசுறுப்பு கூடும்.
சிம்மம்
இன்று காதல் கசக்கும். சுப காரியம் கைகூடும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. மாணவர்களின் மந்தம் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்வைத் தரும். பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. மருத்துவ செலவு உண்டு. காதல் கசக்கும். சுப காரியம் கைகூடும்.
கன்னி
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். திடீர் பயணங்கள் வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள்.
துலாம்
தாயாரின் உடல்நிலை பாதிக்கும். விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும். பணவரவுக்கு பஞ்சமில்லை. கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். திருமண உறவில் உள்ள சிக்கல் நீங்கும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். கோவில் பணிகள் செய்வீர்கள். தம்பதிகளிடையே அன்பு கூடும். எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும்.
தனுசு
மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வர்.பெண்களுக்கு தேவையான ஆபரணங்களை வாங்கிவிடுவீர்கள். காதலர்களிடையே ஊடல்கள் வந்து போகும்.
மகரம்
உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். பணவரவு சுமாராக இருக்கும். பெண்கள் நகை சேமிப்பு அல்லது அதற்கு இணையான சேமிப்பு திட்டத்தினை துவங்குவர். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் கொள்வர்.
கும்பம்
மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களை பெற இயலும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். பழைய விசயங்கள் நினைவில் வந்து போகும். குடும்பத் தலைவிகள் மேற்கொண்ட வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும்.
மீனம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
![]()
