வாழைச்சேனை, ஊத்துச்சேனை வயல் பகுதிக்குச் சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை, ஊத்துச்சேனை வயல் பகுதிக்குச் சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விவசாயி மழை பெய்துகொண்டிருந்த போது வயலுக்குச் சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடியபோது கால்வாயில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுச் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
![]()