இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்று மீண்டும் உறுதியளித்துள்ளது.

பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின், உள்நாட்டுக்கான புதிய பணிப்பாளர் ஷானன் கவுலின் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷானன் கவுலின், நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய போது இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
![]()
