கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் 24 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை மக்கள் பயன்பாட்டுக்காக இன்றைய தினம் 22.06.2026 நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் பரமலிங்கம் சத்தியநாதன், பிரதேச சபை உறுப்பினர்கள், தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்
![]()
