நாட்டில் இன்று (18) பிற்பகல் 1.00 மணிக்கு மேல், பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
அதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் என்றும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
![]()
