மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் ஒரு பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதிய விபத்தில், இரண்டு மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மாணவர்கள் காயமடைந்தனர்.
முர்ஷிதாபாத்தின் பெர்ஹாம்பூர் பகுதியில் உள்ள கர்ணசுபர்ணா ரயில்வே கடவையில், மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
ரயில்வே கதவை திறந்திருந்ததாகவும், பள்ளி வேன் அதைக் கடக்கும்போது எதிரே வந்த நிம்திதா-கட்வா பயணிகள் ரயில் அதன் மீது மோதியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவர்கள் முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![]()
