பிரித்தானியாவில் போலி திருமணச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பெருமளவில் நடைபெற்று வந்த சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி , ஆறு ஆண்டுகளாக இந்த மோசடி இடம்பெற்று வந்துள்ளது.
இதனையடுத்து பிரித்தானியா முழுவதும் உள்ள பல வீடுகளில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன. இதன்போதே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிறகு , அங்குள்ள ஐரோப்பிய ஒன்றிய (EU) குடிமக்கள் சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கு அனுமதிக்கும் ‘ EU Settlement Scheme’ திட்டத்தை இந்த குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கும், ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பிற நாட்டு மக்களுக்கும் இடையே போலியாகத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளனர்.
இதன் மூலம், பிரித்தானியாவில் தங்குவதற்கு எந்தவொரு சட்டப்பூர்வ உரிமையும் இல்லாத பெரும்பான்மையான அல்பேனிய குடியேறிகள் அங்கு குடியேற இந்த கும்பல் வழிவகுத்துள்ளது.
![]()
