பிரித்தானியாவின் லண்டனில் நடந்த கோரமான சாலை விபத்தில் இலங்கை சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் உட்பட மூன்று பேர் பயணித்த கார் ஒன்று மரத்தில் மோதியதில் இந்த விபத்தில் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 29 வயதுடைய பிரவீன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், 20 மற்றும் 25 வயதுடைய இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து சம்பவம் தொடர்பில் சவுத் ஹாரோ பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()
