மிதெனிய வீதி மற்றும் ஹுலந்துவ பாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளைய (19) தினம் 13 மணிநேரம் நீர்விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
ஹுலந்துவ பாலத்திற்கு அருகில் பதிக்கப்பட்டுள்ள நீர்க் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கியப் பராமரிப்புப் பணி காரணமாக நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் நாளை காலை 9.00 மணி முதல் அன்றிரவு 10.00 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
நீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நீர் வழங்கல் சபை வருத்தம் தெரிவிப்பதோடு, அக்காலகட்டத்தில் பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறது.
![]()
