சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் அலங்காரம் உற்சவம் 2026
2ஆம் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
உபயம்- திரு.சு. கந்தையா குடும்பம்,
உயிரைக் காக்கும்
வைரவரை வேண்டி வணங்கி
வளம்பொங்க வாழ்வதே வாழ்வு!
சூழலையும் சுற்றத்தையும் காத்து நிற்பதே அவன் பெரும்புகழ்!
ஆறுதலும் கூறுதலும் அவன் தந்த இணைப்பு!
அவன் இன்றி ஏது இங்கே நமக்கெல்லாம் உயிர்ப்பு!
நமது உயிரைக் காத்து நிற்கும் ஞானவைரவப் பெருமானை மனமுருகி வணங்கி, வாழ்வில் சகல வளங்களும் பெருகி வாழ்வதே உண்மையான வாழ்வாகும். நம்மைச் சுற்றியுள்ள சூழலையும், சுற்றத்தாரையும் (உறவினர்களையும்) அரணாகக் காப்பது அந்த வைரவனுடைய பெரும் புகழாகும். நமக்குக் கிடைக்கும் மன ஆறுதலும், நல்வழிகாட்டுதல்களும் அவன் நமக்குத் தந்த அருட்கொடையாகும். அவன் அருளின்றி இங்கு நம் யாருக்கும் எந்தவொரு இயக்கமும் உயிர்ப்பும் இல்லை.
![]()
