வவுனியாவில் தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
கனடா, டொரன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார். வவுனியா நகர் நோக்கி வாடகை வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனை அவதானித்த வாகன சாரதி, உடனடியாக அவரை பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
![]()
