2009ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் 228 பேர் உயிரிழந்தது தொடர்பாக, ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் மனிதக் கொலைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.
ரியோ டி ஜெனிரோவிலிருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற AF447 விமானம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கிய இந்தச் சம்பவத்திற்கு, விமான நிறுவனமும் விமானத் தயாரிப்பு நிறுவனமும் முழுமையாகவும் முற்றிலுமாகவும் பொறுப்பு என்று பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
ஏப்ரல் 2023ல் நீதிமன்றம் இந்த நிறுவனங்களைக் குற்றமற்றவை எனத் தீர்ப்பளித்திருந்த நிலையில், எட்டு வார கால விசாரணைக்குப் பிறகு தற்போது குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டன.
இரு நிறுவனங்களும் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருவதுடன், மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளன.
38,000 அடி (11,580 மீ) உயரத்தில் இருந்து விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில், அதில் இருந்த 12 பணியாளர்கள் மற்றும் 216 பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர்.
![]()
