கிளிநொச்சி, முறிகண்டிப் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் தம்பதியினர் காயமடைந்துள்ளனர். ரயில்வே கடவையை கடக்க முயன்ற கார் ஒன்று, ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த தம்பதியினர் காயமடைந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட உடனேயே அப்பகுதி மக்கள் இணைந்து, காரில் சிக்கியிருந்த தம்பதியினரை மீட்டு உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![]()