மன்னார் கடல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
மன்னார் கடல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
மன்னார் வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகின.
வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவரின் படகும், காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு மீனவரின் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த மோதலில் இரண்டு படகுகளும் பலத்த சேதமடைந்த நிலையில், அவற்றில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தின் போது ஒரு மீனவர் கடலில் மூழ்கிக் காணாமல் போனார். அருகில் இருந்த சக மீனவர்கள் நீண்ட நேரம் முன்னெடுத்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் பலனாக, குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்தவர் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு மீனவர், சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த பொலிஸாரும், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
![]()
