பொலன்னறுவை, அரலகன்வில காவல் பிரிவுக்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட 29 வயதுடைய இளம் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், நேற்று ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது கணவனால் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதன் பின்னர், படுகாயமடைந்த நிலையில் அவர் உடனடியாக அரலகன்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்பத் தகராறே இந்தத் கொடூரத் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்து, குற்றச் செயலில் ஈடுபட்ட பெண்ணின் கணவர் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
சந்தேகநபரை உடனடியாகக் கைது செய்யும் நோக்கில் அரலகன்வில காவல்துறையினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
![]()
