
தாய் மண்ணின் நேசிப்பும்
தமிழ் மீது பற்றோடும்
வாழ்ந்திடும் ஈழத்தமிழினம்
வாழ்வு எங்கு வாழ்ந்தாலும்
வளம் பொங்க தாய் மண்ணை
நேசிக்கும் பற்றாளர்கள்.
பொருளெல்லாம் உழைத்திடுவார்
பொன்பொருளும் சேர்த்திடுவார்
இதயத்தில் தாகமாய்
ஈழத்தின் உயர்வுக்காக
இரத்தம் சிந்தியே
நிதிகொடுத்து காத்து நிற்பார்
காவிய நாயகராய் ஆக்கியதும் இவர் உழைப்பு
கரிகாலன் போர் சிறக்கச் செய்ததும் இவர் உழைப்பு.
வருங்கால இளைஞரே
இதை அறிந்து நீ எழுந்து
வரலாறு கூறும் வண்ணம்
செயலாற்று தலை நிமிர்ந்து
ஈழத்தின் வரலாறு
பேசுகின்ற தமிழ் இனத்தின்
விடிவு என்ற ஒளி தேடி எழுந்தோரின் கதை அறிந்து
விடிவதை கானவே புலயலாக நீ எழுந்து தலை நிமிர்ந்து!
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா (16.01,2026)
![]()
