கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவத்தின் போது மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜிந்துப்பிட்டி பகுதி சலூனில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் மன்னார் சிலாவத்துறையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் சிலாவத்துறையை சேர்ந்த ஒருவரும் கிராண்ட்பாஸ்,கொட்டாஞ்சேனை பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
ரி 56 ரக துப்பாக்கியால் இந்த சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரையோர பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()
