ஜனநாயகன்’ சென்சார் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய் தமிழகம் வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டும் தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார். தேர்தலுக்காக தன்னுடைய கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு விசாரணை
அந்த வகையில், கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரையின் போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். கரூரில் நடந்த இந்த துயர சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை டெல்லியில் நடைபெற்று வருகிறது.தொடர்ந்து, தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருக்கும் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தவெக தலைவர் விஜய்யிடம் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி சுமார் ஏழு மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நேற்று மீண்டும் சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் சிபிஐ விசாரணை
இந்த அரசியல் மற்றும் சட்ட சிக்கல்களுக்கு மத்தியில், விஜய்யின் கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” படமும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் பிரகாஷ் ராஜ், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா, பிரியா மணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
![]()
