
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தற்போதைய கருத்துக்கள் அரசியல் ரீதியான விரக்தியின் வெளிப்பாடே என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தற்போதைய கருத்துக்கள் அரசியல் ரீதியான விரக்தியின் வெளிப்பாடே என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
சரத் பொன்சேகா மக்களுக்காக அரசியல் செய்பவர் அல்லர் என்றும், அவர் தனிப்பட்ட பகைமையைத் தீர்க்கும் அரசியலையே முன்னெடுத்து வருகின்றார் என்றும் அக்கட்சி சாடியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்ததாவது,
நாட்டின் தலைவர் என்ற ரீதியில் மகிந்த ராஜபக்ச எடுத்த அதிரடியான முடிவுகளாலேயே நாடு பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடையும் போது இராணுவத் தளபதியாக இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே சரத் பொன்சேகாவை நாம் மதிக்கின்றோம் அதனைத் தாண்டி அரசியல் ரீதியாக அவர் ஒரு பெறுமதியற்ற நபர். அவர் மக்களின் நலனுக்காக அரசியல் செய்யாமல், தனது தனிப்பட்ட கோபங்களையும் பகைமைகளையும் தீர்த்துக் கொள்வதற்காகவே அரசியலைப் பயன்படுத்துகின்றார்.
சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் யுத்த வெற்றியின் பெருமையைக் குறைக்கும் வகையிலான இத்தகைய கருத்துக்களைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை.
நாட்டின் தலைவர் என்ற ரீதியில் மகிந்த ராஜபக்ச எடுத்த அதிரடியான முடிவுகளாலேயே நாடு புலிப் பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. சரத் பொன்சேகாவின் தற்போதைய கருத்துக்கள் அரசியல் ரீதியான விரக்தியின் வெளிப்பாடே என்றார்.
![]()
