வடமராட்சி – கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு நீதி கோரி யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊடக செயற்பாட்டின் பின்னர் வீடு திரும்பிய போது துன்னாலை கலிகை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வைத்து கடந்த 15.02.2007 அன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
19 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இராமச்சந்திரன் உயிருரோடு இருக்கின்றாரா இல்லையா என்பது தெரியாதுள்ளது.
ஊடகவியலாளர் சு.இராமச்சநத்திரன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கேட்டும் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
![]()