அழகிய விழியால் கவி சொல்லும் மாது
அசைவில் நடனங்கள் புரிந்திடும் போது
சிறகுகள் விரித்து மனம் எங்கு பறந்திடும் –
சிந்தை என்னைவிட்டு வானில் பறப்பது போலே!
தூக்கத்தைக் கெடுத்த சுந்தரியே!
சுழல் விழிகளினாலே இழுக்கிறாயே!
தாக்கத்தைக் கொடுத்து
ஏக்கத்தில் தவிக்க
தாவணிச் சிலையே… அசைவது எங்கே?
பூத்திட்ட விழிகள் – உன்புன்னகை இதழ்கள்
பேச்சின்றி என்னை இழுத்து எங்கே?
சதிரிடும் பாதச் சலங்கையைப் போலே
என்னை ஆடவிட்ட மங்கை அவள்!
சலங்கையின் நாதம் கேட்பது போலே
என்னுயிர் கூறுமே அவள் பெயரை!
அழகிய தோற்றம் – அவள் விழிகளில் ஏக்கம்;
எதை நினைத்தாளோ மௌனத்தின் தாக்கம்!
சிறுப்பிட்டி எஸ். தேவராசா (கவிஞர் ,இசையமைப்பாளர் ,ஊடவியலாளர்) (15.01.2026)
![]()
