January 14, 2026

அரியாலையில் ரயில் மோதி இளைஞன் மரணம்!


யாழ்ப்பாணம் – அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த சிவராஜா சிவலக்சன் (வயது 23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை காணப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.